8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், நீதித் துறையில் ஊழல் என்ற பதிவுக்காக என்சிஇஆா்டி மன்னிப்பு கோரியது.
என்சிஇஆா்டியின் 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில், நீதித் துறையில் ஊழல் என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றுள்ளதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பதாக என்சிஇஆர்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது எதிர்பாராமல் நடந்த தவறு எனவும், நீதித்துறையை உயர்வாக மதிப்பதாகவும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பாடம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய கல்வி ஆண்டிற்குள் புதிய பாடம் சேர்க்கப்படும் எனவும் என்சிஇஆர்டி கூறியுள்ளது.
















