மறைந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், பிகினி உடையில் இருக்கும் பெண்களுடன் உள்ள புகைப்படம் வைரலான நிலையில், அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகளில் இந்தப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹாக்கிங் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து காக்டெய்ல் அருந்துவதும், அவருக்கு அருகில் பிகினி உடையில் இரு பெண்கள் இருப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் குறித்து ஹாக்கிங்கின் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கிங்கின் நீண்டகால பராமரிப்பாளர்கள் என்றும், நியூரான் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கிங்கிற்கு 24 மணி நேர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர்கள் எப்போதும் அவருடனேயே இருந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
















