டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, BRS கட்சியின் முன்னாள் MLC கவிதா உள்ளிட்ட 23 பேரை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இவர்களுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கருதிய நீதிபதி, விசாரணையை தொடரத் தேவையான முகாந்திரம் இல்லாததால், அவர்களை விடுவிப்பதாக அறிவித்தார்.
















