சஹாரா பாலைவனத்தில் வாகனங்கள் மீது லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இயற்கை சீற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நடிகர்கள் சூர்யா மற்றும் மோகன் லால் இணைந்து நடித்த காப்பான் படத்தில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
சஹாரா பாலைவனத்தில் சமீபத்தில் பெய்த எதிர்பாராத கனமழை மற்றும் தட்பவெப்ப மாற்றமே இந்த பிரம்மாண்ட வெட்டுக்கிளி பெருக்கத்திற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















