மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள திரையரங்கில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படத்தினை படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் ‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேலூரில் உள்ள திரையரங்கில் இப்படத்தினை படக்குழுவினர் கண்டுகளித்தனர்.
அப்போது, பொதுமக்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா, குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
















