நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று, வீட்டின் வளாகத்திற்குள் உலா வந்து அங்கேயே ஓய்வெடுத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரோகிணி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, அங்கிருந்த ஒரு வீட்டின் உள்ளே நீண்ட நேரம் உலா வந்து ஓய்வெடுத்துள்ளது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
















