சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிறந்த வீட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மாசி படையல் விழா விமரிசையாக நடைபெற்றது.
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள மாவிழியம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான மாசி படையல் விழா சிறப்பாக நடைபெற்றது.
அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிறந்த வீட்டு பெண்களை வரவேற்று உறவினர்கள் வழங்கிய கோழி, சேவல் ஆடுகள் பலியிடப்பட்டு அறுசுவையில் உணவு சமைத்து பரிவார தெய்வங்களுக்கு படையலிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பிறந்த வீட்டு பெண்களுக்கு உறவினர்கள் அசைவ உணவுகளை பரிமாறினர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை உண்டு மகிழ்ந்தனர்.
















