கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் வியாபாரியிடம் காவலர் எனக்கூறி துப்பாக்கியை காண்பித்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த முத்தா என்பவர் பாகலூர் சாலையில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம் போல கடையில் இருந்ததை நோட்டமிட்ட நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்ததோடு தன்னை காவலர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவரது நடத்தையில் சந்தேகமடைந்த பெண் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததோடு தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
இதனை சுதாரித்துக்கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
















