தனியார் இடத்தில் அனுமதியின்றி ஜல்லி கொட்டுவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, நீதிமன்ற வழக்கு உள்ள தனியார் இடத்தில் அனுமதியின்றி ஜல்லி, பாறைப்பொடிகளை கொட்டி, தனிநபர் ஒருவர் குடோன் போன்று செயல்படுத்தி வருவதாக வணிகர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
நடைக்காவு சந்திப்பில் உள்ள தனியார் காலிமனையில், கேரளாவிற்கு ஜல்லி, கல், மண் விற்பனை செய்ய வாகனங்களில் கொண்டுவந்து கொட்டுவதால் தூசுகள் பரவி சுவாசக் கோளாறு ஏற்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
















