சேலம் பால் மார்க்கெட்டில் கடைகளை அகற்ற எதிர்ப்பு : திமுகவினர் ஆக்கிரமிக்க திட்டம்? - வியாபாரிகள் கொந்தளிப்பு!
Mar 15, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் பால் மார்க்கெட்டில் கடைகளை அகற்ற எதிர்ப்பு : திமுகவினர் ஆக்கிரமிக்க திட்டம்? – வியாபாரிகள் கொந்தளிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் பால் மார்க்கெட்டில் காலங்காலமாக கடை வைத்து நடத்திய வியாபாரிகளை திமுகவினர் சூழ்ச்சி செய்து வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பராமரிப்பு என்ற போர்வையில் பழைய கடைகளை அகற்றி, புதிய கடைகளை ஆக்கிரமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

சேலம் செவ்வாய் பேட்டையில் 1962ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது பழமையான சத்திரம் பால் மார்க்கெட்… இங்கு 185 நிரந்தர கடைகள், 65 தற்காலிக கடைகள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் பால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை சீரமைப்பதாகக் கூறி 5 கோடி நிதி ஒதுக்கிய சேலம் மாநகராட்சி, கடைகளை இடித்து அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், பராமரிப்பு பணி என்ற போர்வையில் பூமி பூஜைக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.

வியாபாரிகளின் எதிர்ப்பால் தொடர்ச்சியாக பால் மார்க்கெட் அருகே 40 தற்காலிக கடைகளை அமைக்க சேலம் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அதற்கான பணிகள் 40 சதவிகிதம் மட்டுமே முடிந்த நிலையில், பால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்பந்திப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

மராமத்து என்று பணிகளை துவக்கிய மாநகராட்சியும், ஆளுங்கட்சியினரும் முழுமையாக கடைகளை இடித்து தள்ள முடிவு செய்துள்ளதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு கடைகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

பால் மார்க்கெட்டில் 250 கடைகள் உள்ள நிலையில், 40 தற்காலிக கடைகள் மட்டும் அமைத்துவிட்டு, தங்களை வெளியேற்ற மாநகராட்சி வற்புறுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

சேலம் வஉசி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை ஆக்கிரமித்தது போல் பால் மார்க்கெட்டிலும் கடைகளை ஆக்கிரமிக்க ஆளும் கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, பழைய மார்க்கெட்டில் காலங்காலமாக கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கே, புதிதாக கட்டப்படும் கடைகள் ஒதுக்கப்படும் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடைகளை ஆக்கிரமிக்க முனைப்பு காட்டும் திமுகவினரை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் வியாபாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags: Salem Milk Market issueold Chatram Milk MarketSalem's Chevvai PettaiSalem Corporationtemporary shops in salem marketDMK is manipulating and evicting tradersSalem Milk Market
ShareTweetSendShare
Previous Post

குறைகிறதா அமெரிக்க ஏவுகணை இருப்பு? : எப்போது முடிவுக்கு வரும் ஈரான் போர்? – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு : ட்ரம்புக்கு நற்சான்றிதழ் வழங்கிய பில் கிளிண்டன் – சிறப்பு கட்டுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies