சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த தாக்குதல் சம்பவம், சாதிய மோதல் அல்ல என காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இடைக்காட்டூர் கிராமத்தில் போதை கும்பல் நடத்திய தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், தாக்குதல் சம்பவம் சாதிய மோதல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறே மோதலுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















