சட்டவிரோதமாக பரஸ்பர வரிகள் மூலம் வசூலித்த 12 லட்சம் கோடி ரூபாயை திருப்பி தருமாறு அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் வர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி உலக நாடுகள் மீது அதிக அளவில் பரஸ்பர வரிகளை விதித்தார். இதையடுத்து உலக நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன. மேலும் அமெரிக்காவிலேயே டிரம்பின் வரி விதிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் எதிர்கட்சிகள் ஆளும் மாகாணங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் இணைந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பரஸ்பர வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் கோடி ரூபாயை இறக்குமதியாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என மன்ஹாட்டன் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் டிரம்ப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
















