தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞர் அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 12ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு சிறையின் சமையலறை பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடி உள்ளார். தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
















