கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நேரில் ஆஜராகினார்.
இந்நிலையில் இந்த வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி புலன் விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், இதுதொடர்பாக இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
















