மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் தப்பியோடியபோது காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சென்று இருவரை தாக்கியது தொடர்பான வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற ஆகாஷ் என்பவர் பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, காயமடைந்த ஆகாஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, ஆகாஷ் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















