போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த முகமது ஹருண் மை என்பவர், கடந்த 1999ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதாமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.
இவர் தனது பெயரை மாற்றி போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இந்நிலையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்கதேசம் செல்ல முயன்ற அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
















