முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம்,சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன் 27.48 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணி 14.65 கோடியை ரூபாயும் வழங்கப்பட்டது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேபோல், சஞ்சு சாம்சன் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்பட 321 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
















