சர்ச்சைகுரிய வகையில் விமர்சித்த நடிகர் பார்த்திபனுக்கு, த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மைக்ரோ போன், ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது என கூறியுள்ளார்.
மேலும், அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும் என்றும், அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், த்ரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
















