மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் செம்மண் கடத்தப்படுவதை, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை காவிரி ஆற்றில், நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள், இரவு நேரங்களில் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு செம்மண் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















