தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உலகளாவிய அரசியல் சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதனால், எரிவாயுவின் இருப்பு மற்றும் விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,
வாடிக்கையாளர்கள் தங்களின் நிறுவன தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று எரிபொருட்களை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை சீரடைந்தவுடன் விநியோகம் தொடர்பான தகவல் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
















