மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த இளைஞர், ஒருவரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மானாமதுரையில் வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர், போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆகாஷின் உறவினர்கள் காவல்துறைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் நள்ளிரவில் இருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி வீசும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















