திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 70 சதவீதம் கொள்முதல் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒரு வாரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், லாரிகள் மற்றும் லோடுமேன் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்புவதில் தாமதம் நிலவுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் செய்யும் பணியை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், போர்க்கால அடிப்படையில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















