ஐபிஎல் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த நிலையில், தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 28-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முதல் கட்ட போட்டிகள், பெங்களூர், மும்பை, கவுகாத்தி, சண்டிகர், லக்னோ, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அகமதாபாத், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளன.
தொடக்க நாளான 28-ம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ள போட்டியில், நடப்பு சாம்பியனான RCB அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதவுள்ளது.
தொடர்ந்து 29-ம் தேதி மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 30-ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதேபோல, அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ள போட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழுமையான அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















