இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வழக்கமான அமளிக்கு மத்தியில் மக்களவையில் உரையாற்றிய ஹர்தீப் சிங் பூரி, எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு நம்மிடம் உள்ளதாகவும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு மற்றும் விநியோகச் சங்கிலி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.தற்போது வரை நாட்டில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படவில்லை எனக் கூறினார்.
மேலும் போர்ச் சூழலால் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகளையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகக் கூறிய அவர், பொதுமக்கள் பதற்றமடைந்து எரிபொருளை சேமிக்கத் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தடையின்றி விநியோகத்தை தொடரவும், எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த ஹர்தீப் சிங் பூரி, இதுபோன்ற இக்கட்டான காலங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்தார்.
















