புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடனை திருப்பி செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.
நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த செங்கொடி என்பவர் தனது தந்தையின் வீட்டை, சகோதரருக்கு தெரியாமல், அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கடனை முறையாக செலுத்தாததால், நிதி நிறுவன அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைக்க வந்தனர்.
அப்போது தனது சகோதரி, தனக்கு தெரியாமல் கடன் வாங்கியதாகவும், விரைவில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாகவும் முத்துக்குமார் கூறினர். எனினும் அதனை கேட்காத ஊழியர்கள் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
















