தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனத்தை அமைப்பதற்கு மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் உரையாற்றிய விசிக எம்.பி ரவிக்குமார், தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் இல்லை எனவும் அதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். ஹோமியோபதி சார்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசிடம் இருந்து தேசிய ஹோமியோபதி நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எவ்வித முன்மொழிவும் பெறப்படவில்லை எனவும் கூறினார்.
















