காஞ்சி சங்கர மடத்தின் 70ஆவது சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிறந்தநாள் முன்னிட்டு அவர் தனது குருவான 68வது பீடாதிபதியாக இருந்து முக்தி அடைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் உள்ள அவருடைய திரு உருவ சிலைக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து ஆசி பெற்றார்.
பின்னர் பலவித மலர் அஞ்சலி செலுத்தி வேத மந்திரங்களை ஓதி தூப தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
















