கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றன.
ஓசூர் ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா கடந்த 3-ம் தேதி வெகு விமர்சையாக நிறைவடைந்தது.
இந்நிலையில் மலைக்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கழிவுகள் அதிகளவில் தேங்கிக் காணப்பட்டன.
இந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்த நிலையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் முழுவதும் சுத்தம் செய்தனர்.
















