விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூர் சாலையில் இரவிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேடநத்தம் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூரில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
















