பீகார் ராஜ்சபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் வராததால் ராஷ்டிரிய ஜனத தளம் தோல்வி அடைந்தது.
பீகாரில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக மற்றும் ஆர்ஜேடி இடையே கடும் போட்டி நிலவியது.
இப்பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் திடீரென வாக்களிக்க வரவில்லை.
இதனால், என்டிஏ கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றியது. இதனிடையே தங்களது தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணமென ராஷ்டிர ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
















