மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் தனது சொந்த தொகுதியான பவானிபூரில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மலைப்பகுதியில் உள்ள 3 இடங்களில் திரிணாமுல் காங்கிரசின் கூட்டணி கட்சியான பாரதிய கோர்க்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சா போட்டியிடுகிறது.
















