புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பெயரில் 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ரங்கசாமி பெயரில் அசையும் சொத்து 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், அசையா சொத்து 27 கோடியே 78 லட்சம் ரூபாயும், கடன் 35 லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம் பெயரில் அசையும் சொத்து 16 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், அசையா சொத்து 27 கோடியே 10 லட்சம் ரூபாயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பெயரில் அசையும் சொத்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், அசையா சொத்து ஒரு கோடியே 63 லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் பெயரில் அசையும் சொத்து 21 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயும், அசையா சொத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் பெயரில் அசையும் சொத்து 6 கோடியே 74 லட்சம் ரூபாயும், அசையா சொத்து 29 கோடியே 60 லட்சம் ரூபாயும் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















