பாலமேடு அருகே செயல்படும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திர வெள்ளாளபட்டி ஊராட்சியில் உள்ள மலை பகுதியில் செயல்படும் மணல் குவாரியில், சட்டவிரோதமாக பாறைகளை வெடி வைத்து தகர்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும், குவாரியின் உரிமத்தை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
















