தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளாதாக தெரிவித்தார். விஜய் அரசியல் தெரிந்து கொள்ளட்டும் என்றும் மக்களுக்கு பணியாற்றட்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் பிரச்சினைகளுக்காக பேசட்டும் என்றும், மக்களோடு மக்களாக இருந்து விஜய் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
















