சென்னை மாத்தூரில் திமுக கவுன்சிலர், பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இது தொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லையென கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் காசிநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அடிக்க கை ஓங்க முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
















