மதுரையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கீழ நெடுங்குளம் கிராமத்தில், கண்மாய் பாசனத்தை நம்பி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்மணிகள் அனைத்தும், முனியாண்டி கோவில் களத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்தும், கடும் வெயிலில் காய்ந்தும் நெல்மணிகள் சேதமடைந்துள்ளன.
நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் தற்போது ஈரப்பதம் காரணமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
















