திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலை மற்றும் பட்டா நிலங்களில் எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் 3வது நாளாக திணறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த வறண்ட சூழலால் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ தொடர்ந்து மூன்றவாது நாளாக பூம்பாறை அருகே பரவி எரிந்து வருகிறது.
















