தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக, அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அதிமுக சார்பில் அறிவிப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
















