அமெரிக்காவில் உயிரிழந்த முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கிளாவிகுலர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில், எவர்க்லேட்ஸ் பகுதியில் ஒரு போட்டில் சென்ற நபர்கள், அங்கிருந்த ஒரு முதலையை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதையடுத்து, பிரபல யூடியூபர் கிளாவிகுலரை கைது செய்த போலீார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த முதலை ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டாலும், வனவிலங்கு சட்டங்களின்படி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினம் இறந்திருந்தாலும், அதனை நோக்கி துப்பாக்கியால் சுடுவது சட்டவிரோதமானது என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிளாவிகுலரின் அதிகாரப்பூர்வ கிக் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு சட்டங்களை மீறுவதும், இதுபோன்ற ஆபத்தான செயல்களை நேரலையில் ஒளிபரப்புவதும் சமூக வலைதள விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
















