ஈரானின் அணுசக்தி நிலையங்கள், முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய எஃகு ஆலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்காக வழங்கிய காலக்கெடுவை இந்தத் தாக்குதல் மீறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திறனை முடக்குவதே முதன்மை நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒப்பந்தங்களை மீறி ஈரான் இங்கு ஆயுதத் தரத்திலான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாகக் கூறி இந்த ஆலை தகர்க்கப்பட்டது.
மேலும், அணு ஆயுதங்களுக்கான அடிப்படை மூலப்பொருளான யுரேனியம் பிரித்தெடுக்கும் இந்த மையத்தையும் இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியுள்ளது.
அணுசக்தி நிலையங்கள் மட்டுமின்றி, எஃகு ஆலைகளும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
குசெஸ்தான் எஃகு ஆலையின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்தச் செயலை மன்னிக்க முடியாத குற்றம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் தனது அத்துமீறல்களுக்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
















