அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்று தொழிலதிபர் பசி என்ற சொல்லே இருக்காது தெரிவித்துள்ளார்.
கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் உணவிற்காக நீண்ட வரிசையில் சிறு குழந்தைகள் காத்திருக்கும் வீடியோவை வெளியிட்டு, இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
உலக வல்லரசுகளும் சில வளர்ந்து வரும் நாடுகளும் தங்களின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஆயுதங்களுக்காகவும் போருக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றன.
நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டிகளுக்காகச் செலவிடப்படும் இந்தத் தொகை, ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கக் கூடியது.
பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா தனது எக்ஸ் பதிவில், “இந்த உலகம் தனது முன்னுரிமைகளை தவறாக நிர்ணயித்துள்ளது என்று மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்று கூறியுள்ளார்.
அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்றும், போர் நடக்கும் நாடுகளில் குண்டுகளுக்குப் பயந்து ஓடும் மக்களை விட, பசியால் மெல்ல மெல்லச் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் சோகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















