புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் - வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!
Oct 17, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெய்ப்பூரில் புகைப்படம் எடுப்பதற்காக யானைக்கு Pink நிறம் பூசிய வெளிநாட்டு கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா. இவர் தனது கலைப் படைப்பை எடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வருகை வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்ப்பூரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான யானையை, அந்த நகரின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்ட வேண்டும் என ஜூலியா விரும்பினார். அதன்படி யானையின் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டது. மேலும், வர்ணம் பூசப்பட்ட மாடல் அழகி ஒருவரை யானையின் மீது அமரவைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

அழகிற்காக ஒரு வாயில்லா ஜீவனை வர்ணம் பூசி காட்சிப்படுத்துவது விலங்கு வதை எனவும் யானைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் நுண்துளைகள் கொண்டது எனவும், அதன் மீது ரசாயனங்கள் அல்லது அதிகப்படியான வண்ணங்களை பூசுவது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஜூலியா, யானைக்குப் பூசப்பட்டது முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வண்ணம் எனவும் இதனால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Pink Elephant ControversyRussian PhotographerViral Photo ShootPublic OutrageEthical PhotographyCruelty to AnimalsWildlife ProtectionAnimal Welfare ConcernRajasthan Culture
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies