ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2025-26-ம் நிதியாண்டில் 38 ஆயிரத்து 424 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்திய ஏற்றுமதி செய்தள்ளதாகவும் கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 62 புள்ளி 66 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்த ஏற்றுமதியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 54 புள்ளி 84 சதவீதம் எனவும், தனியார் துறையின் பங்களப்பு 45 புள்ளி 16 சதவீதம் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
















