சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன் எனவும். அதேநேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது எனவும் குறிப்பிட்டார்.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும், மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
















