ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஆண்டிற்கு இரு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஆண்டிற்கு இரு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு, அன்பு தங்கை திட்டத்தின் கீழ் இலவசமாக மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் எனவும், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி 8 ஆயிரம் ரூபாயில் இருந்து, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















