திமுக அரசு மொழியை வைத்து குழந்தைகளிடம் பாகுபாடு கற்பிப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தனியார் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை கிடையாது என அறிவிக்க முதலமைச்சர் தயாரா என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் சாமானியர்களின் குழந்தைகளுக்கு இரு மொழி கொள்கை ஆனால் பணம் படைத்தவர்களின் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கையா என்றும் அவர் வினவியுள்ளார்.
ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் கூட மும்மொழி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என்றும், திமுக அரசு மொழியை வைத்து குழந்தைகளிடம் பாகுபாடு கற்பிக்கிறது என்றும் கூறினார். இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது என்றும தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
















