அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி அவிநாசி பகுதி முழுவதும் பசுமையான பகுதியாக மாற்றப்படும் என உறுதியளித்து எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வடுகபாளையம், பிச்சாண்டம் பாளையம், காரைக்குட்டை, புஞ்சைதாமரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் உரையாற்றிய எல்.முருகன், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தார். அப்பகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், எல்.முருகன் தெலுங்கு மொழியில் சகஜமாக கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.
















