வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற நிலையில் நீடிக்கும் என தெரிவித்தார்.
ஈரான் போரால் உலக பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லை என்றும் எனினும் இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
















