நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் உங்களுக்கு தான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளளார்.
ஹைதராபாத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்று சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் அது உங்களுக்கு தான் ஆபத்து என தெரிவித்தார்.
உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், படிக்கிற வயதில் முதலில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடக்கூடாது என்றும், வாழ்க்கை கெட்டுப் போய்விடும் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.
















