முதலமைச்சரின் பிரசார பாதையில் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிட்டார். அப்போது தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயின் பிரசார பாதையில் மறியலில் ஈடுபட்டதாக கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தவெக தொண்டரை தாக்க முயன்றதாகவும், அவதூறு வீடியோ பரப்பியதாகவும் கார்த்திகா உட்பட 9 பேர் மீது 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்நிலையில் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகா மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகா, முருக சந்திரகுமார் உட்பட 9 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
















